தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கண்ணகி கோவில் அறக்கட்டளை சார்பாக பளியன்குடி மலை அடிவாரத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.
கோவில் கொடியேற்ற நிகழ்வு :-
தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணகி கோவில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது .
தமிழக - கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன்னேற்பாடு மேற்கொள்வதற்கானஆலோசனை கூட்டம் கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் கோவில் திருவிழா கொண்டாடப்படுவதற்கான பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது
இதனையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெறுவதற்கு தமிழக மற்றும் கேரள வனத்துறை அனுமதி அளித்தனர்.
ஏப்ரல் 16ஆம் தேதி திருவிழா நடைபெறுவதையொட்டி , இன்று ( ஏப்ரல் 5 ) மங்கலதேவி கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சார்பாக கொடியேற்ற நிகழ்வு கூடலூர் அருகே உள்ள பளியங்குடி மலை அடிவாரத்தில் நடைபெற்றது.

பொங்கல் வைத்து வழிபட
இந்த கொடி ஏற்ற நிகழ்வில் கூடலூர் நகர மன்ற தலைவர் பத்மாவதி லோகன்துரை மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொடியேற்ற விழா நிகழ்வில் பெண்கள் பொங்கல் வைத்து கண்ணகி தேவியை வழிபட்டனர். இந்நிகழ்வானது வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனுமதியுடன் நடைபெற்றது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.