Home /local-news /

கம்பம் : காந்திஜி பூங்காவில் தீவிரமாக நடைபெறும் பராமரிப்பு பணிகள் 

கம்பம் : காந்திஜி பூங்காவில் தீவிரமாக நடைபெறும் பராமரிப்பு பணிகள் 

Park 

Park 

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்த காந்திஜி பூங்காவில், தற்போது சேதமடைந்த பொருட்கள் மாற்றப்பட

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருந்த காந்திஜி பூங்காவில், தற்போது சேதமடைந்த பொருட்கள் மாற்றப்பட்டு, முழுமையாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


    கம்பம் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தைக்கு அருகே அமைந்துள்ளது, அரசு காந்திஜி பூங்கா. இந்தப் பூங்கா நூலக வசதியுடன் தொடங்கப்பட்ட பூங்காவாகும். இந்தப் பூங்காவில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்மக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்யவும், பெரியோர்கள் பொழுதுபோக்கிற்காகவும், சிறுவர்கள் விளையாடவும் இங்கு வருவது வழக்கம்.

    ஆனால், கடந்த சில வருடங்களாக பூங்கா உரிய பராமரிப்பின்றி ஒவ்வொரு பொருளாக சேதம் அடைந்து, பூங்காவில் உள்ள அனைத்துப் பொருள்களும் சேதமடைந்து பூங்கா கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. மது பிரியர்கள் மது அருந்துவதற்கும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் ஏற்ற இடமாக மாறிய நிலையில் காணப்பட்டது காந்திஜி பூங்கா.

    இந்த நிலையில், காந்திஜி பூங்காவில் உள்ள சேதமடைந்த பொருட்கள் முழுமையாக சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.


    இதனை தொடர்ந்து, காந்திஜி பூங்காவில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பூங்காவில் யோகா மையம், உடற்பயிற்சி மையம் என தொடர்ந்து புத்தாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடற்பயிற்சி செய்யும் விதமாக அனைத்து உடற்பயிற்சி உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு, கம்பம் காந்திஜி பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி