Home /local-news /

கிசான் கடன் அட்டையின் நன்மைகள் - பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

கிசான் கடன் அட்டையின் நன்மைகள் - பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி...

PM

PM Kisan

PM Kisan Scheme for Farmers | தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் மத்திய அரசின் கிசான் கடன் அட்டை திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற சிறப்பு கிசான் மேளாவில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்கவும் ...
    தேனி : மத்திய அரசின் கிசான் கடன் அட்டை திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு

     

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கிரிஷி விக்யான் கேந்திரா சார்பில் 75 வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு "விவசாயிகளின் பங்களிப்பிற்கே நமது முன்னுரிமை" எனும் தலைப்பில் உழவர் பெருவிழா மற்றும் விவசாயிகள் விஞ்ஞானிகளிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அகிலன் கலந்து கொண்டு விவசாயிகளிடையே வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    Awareness 
    அகிலன்


    அப்போது பேசிய அவர், கிசான் கடன் அட்டையின் மூலம் 1.60 லட்சம் முதல் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவற்றை வாங்கவும், இதர விவசாய பணிகளை மேற்கொள்ளும் வகையில் தங்களுக்கு தேவையான நேரங்களில் இந்த கடன் அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

    இத்திட்டத்தின் கீழ் கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு அரசின் இரண்டு சதவீத வட்டி மானியம் மற்றும் 3 சதவீத வட்டி ஊக்கத்தொகை விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    இது மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகளில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதுவரை விவசாய கடன் அட்டைகள் பெறாத விவசாயிகள் தங்களது நில உரிமை ஆவணங்கள்,வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து சிறப்பு முகாம்கள் மூலம் கடன் அட்டை பெற பதிவு செய்து கொள்ளவும் விவசாயிகளை அவர் வலியுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளிடையே தங்களது துறை சார்ந்த செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

    முன்னதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.வீ. முரளீதரன் பார்வையிட்டார்.

    இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தேனி வேளாண்மைத் துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி உள்ளிட்டோரும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளும், 250 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: PM Kisan, Theni

    அடுத்த செய்தி