Home /local-news /

சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - வயது, கல்வித்தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட முழு விவரம்

சமூக பாதுகாப்புத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - வயது, கல்வித்தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட முழு விவரம்

Jobs

Jobs

Jobs | தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான 3 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    சமூக பாதுகாப்புத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆற்றுபடுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்பு :-

    தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான 3 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

    ஆற்றுபடுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

    1. ஆற்றுப்படுத்துநர் :-

    ஒப்பந்த அடிப்படையிலான ஆற்றுப்படுத்தல் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.14,000 வழங்கப்படும்.

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரி உளவியல் / சமூகவியல் அல்லது முதுநிலை பட்டம் சமூக பணி (மருத்துவம் & உளவியல்) படித்தவராக இருக்கவேண்டும்.

    இத்துடன் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் / குழந்தைகள் நலன் சார்புடைய பணிகளில் 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

    40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    2. உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் :-

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர்களுடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு 1 காலியிடம் உள்ளது

    இந்த பணியில் தேர்ச்சி பெற்று பணியாற்றும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.

    இந்த பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    3. உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் :-

    மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலகத்தில் உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணிக்கு ஒரு காலியிடம் உள்ளது.

    இப்பணிக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.9,000 வழங்கப்பட உள்ளது.

    இப்பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    தட்டச்சில் தமிழ்/ஆங்கிலத்தில் இளநிலை / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மேற்கண்ட கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் கொண்டவர்களுக்கு ஓர் ஆண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது.

    இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - II, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி - 625 531 என்ற முகவரிக்கு சென்று ( ஏப்ரல் மாதம் ) 11-04-2022 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விபரங்களுக்கு 04546 291919 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 89031 84098 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Employment, Government jobs, Job search, Job Vacancy, Theni

    அடுத்த செய்தி