Home /local-news /

ஹிஜாப் சர்ச்சை - கம்பம் பகுதியில் வலுவடையும் இஸ்லாமியர்களின் போராட்டம்.. 

ஹிஜாப் சர்ச்சை - கம்பம் பகுதியில் வலுவடையும் இஸ்லாமியர்களின் போராட்டம்.. 

ஹிஜாப் சர்ச்சை - கம்பம் பகுதியில் வலுவடையும் இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம் 

ஹிஜாப் சர்ச்சை - கம்பம் பகுதியில் வலுவடையும் இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம் 

Hijab Controversy | தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஹிஜாப் சர்ச்சை :-

    ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களைக் கண்டித்தும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும் கடந்த வெள்ளியன்று முஸ்லிம் இயக்கத்தைச் சார்ந்த நபர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் மற்றொரு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நூற்றுக்கணக்கானோர் கூடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

     

    ஆர்ப்பாட்டம் :-

    கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராடத்தை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் நகரில்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் கம்பம் நகர் ஏகேஜி திடலில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

    வலுப்பெறும் ஆர்ப்பாட்டம் :-

    இந்த கூட்டத்தில் ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் கலந்துகொண்டு ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக முழக்கமிட்டனர். மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முஹம்மது ஒலி
    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

    இதுகுறித்து முஹம்மது ஒலி கூறுகையில் , \" வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழும் இந்திய திருநாட்டில் அவரவர்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளை சுதந்திரமாக பின்பற்றலாம் என்று இந்திய அரசியல் சாசனம் அனைத்து இந்திய மக்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது. இதை சிதைக்கும் விதமாக மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்துத்துவ அமைப்புகள் செய்து வருகின்றன. இதை ஜனநாயக சக்திகள் முறியடிக்க வேண்டும்\" என்று தெரிவித்தார்.

    மேலும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது இதை ஒருபோதும் முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் கூறினார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Hijab, Theni

    அடுத்த செய்தி