Home /local-news /

வைரல் ஆடியோவுக்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம்.. தொடரும் கனமழை.. இன்றைய தேனி மாவட்ட முக்கிய செய்திகள்..!!

வைரல் ஆடியோவுக்கு தங்க தமிழ்செல்வன் விளக்கம்.. தொடரும் கனமழை.. இன்றைய தேனி மாவட்ட முக்கிய செய்திகள்..!!

Thangatamilselvan 

Thangatamilselvan 

Theni Headlines Today |  தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

  என்னிடம் எந்த பணமும் கொடுக்கப்படவில்லை\" தங்கத்தமிழ்செல்வன் பதில் - இன்றைய தேனி மாவட்ட செய்திகளின் முக்கிய தொகுப்பு (12/4/22)

  தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...

  வாசிப்புப் பயிற்சி ஊக்கப்படுத்த முயற்சி :-

  தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள இலக்கிய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பிரபு, தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்யும் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் ‌. இந்த நிலையில் தன்னுடைய மகளான இளவேனில் பிறந்த நாளில், தனது மகளின் பள்ளியில் படிக்கும் சக மாணாக்கர்களுக்கு பிறந்தநாள் அன்பளிப்பாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார் . குழந்தைகளின் பிறந்த நாளன்று பொதுவாக இனிப்புகள் வழங்கப்படும் நிலையில், குழந்தைகளுக்கான வாசிப்பு பயிற்சி மேம்படுத்த திருக்குறள் புத்தகம் அளித்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  இது குறித்து அவர் கூறுகையில் ' வளரும் தலைமுறையினர் நல்ல நூல்களை வாசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் ‌. அதற்கான வாய்ப்புகளை இந்தச் சூழ்நிலையில் தமிழ் ஆர்வலர்களாகிய நாம்தான் உருவாக்க வேண்டும் ' என்றார்.

  என்னிடம் எந்த பணமும் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்

  தேனி அல்லிநகரம் நகராட்சியில் நடைபெற்ற நகரமன்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. தேனி அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவி காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுகவை சேர்ந்த கவுன்சிலர் ரேணுப்பிரியா போட்டியின்றி நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ரேணு பிரியாவின் கணவருமான பாலமுருகனை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

  இந்த நிலையில் நகர்மன்றத் தலைவர் ரேணு பிரியாவும் பெண் கவுன்சிலர் ஒருவரும் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்காக பேரம் பேசியதாகவும் அந்தப் பணம் கவுன்சிலர்களுக்கு சென்று சேரவில்லை என்பது போன்ற செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

  இந்த வைரல் ஆடியோ குறித்து தங்க தமிழ்செல்வன் கூறுகையில், \"ரேணு பிரியா மற்றும் திமுக கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் . அந்த ஆடியோவில் உள்ளது போல் எந்த பணமும் என்னிடம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக சார்பில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லி நகரம் நகராட்சி தலைவர் பதவியில் இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தை முடியும் வரையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினரான ரேணு பிரியாவே நகராட்சித் தலைவராக தொடர்வார்” என தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளரான தங்கத் தமிழ்செல்வன் கூறியுள்ளார்

  இலவச மருத்துவ முகாம் :-

  தேனி மாவட்டம் கம்பம் நகரில் தேனி தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச கருத்தரித்தல் ஆலோசனை முகாம் நடைபெற்றது . கருத்தரிப்பு சிறப்பு டாக்டர் மற்றும் மனநல டாக்டர்கள், அவசர சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

  ரேஷன் அரிசி பறிமுதல் :-

  தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200 கிலோ கோதுமை கூடலூர் காவல் ஆய்வாளர் தலைமையில் பறிமுதல் செய்யப்பட்டது.

  கூடலூர் தண்ணீர் தொட்டி பகுதியில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கூடலூர் நகர காவல் ஆய்வாளர் பிச்சை பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் பிரகாஷ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 200 கிலோ கோதுமை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.

  14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு :-

  கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறப்பு :-


  தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் கடந்த 9 மாதங்களாக நீர்மட்டம் முழுக்கொள்ளளவில் உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் விழாவை முன்னிட்டு வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால், 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

  தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று (11/4/22) மாலை 6 மணிக்கு வைகை அணையில் இருந்து மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் முதல் இரண்டு நாட்களுக்கு 750 கன அடி தண்ணீர் வீதமும், அதற்கு அடுத்த நாட்களில் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்படும். மொத்தம் மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக
  216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

  செய்தியாளர்: சுதர்ஸன்
  Published by:Arun
  First published:

  Tags: Thanga Tamilselvan, Theni

  அடுத்த செய்தி