Home /local-news /

கூடலூர் வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

கூடலூர் வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்

கூடலூர்

கூடலூர் வழிவிடும் முருகன் கோவில்

Theni Gudalur Vazhividum Murugan Temple | தேனி மாவட்டம் தமிழக - கேரள மலைப் பாதையில் அமைந்துள்ள, வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது .

    தேனி மாவட்டம் கூடலூரை அடுத்து, தமிழக - கேரள மலைப் பாதையில் அமைந்துள்ள, வழிவிடும் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது .

    லோயர் கேம்ப் :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் - குமுளி மலைச்சாலையில் ஸ்ரீ வழிவிடும் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம், கூடலூர், குமுளி, வண்டிப் பெரியாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இந்த முருகன் கோவிலானது, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ளதாலும், சிறிய அளவிலான அருவியும் உள்ளதாலும் பக்தர்களுக்கு விருப்பமான கோவிலாக உள்ளது.

    சிறப்பு பூஜை :-

    லோயர்கேம்ப்பில் உள்ள ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு தை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பதை காண முடியும்.

    இதனையடுத்து இன்று பங்குனி உத்திரத்தையடுத்து வழிவிடும் முருகன் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு, பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மேலும் சுவாமிக்கு கிரீடம், மலர் மாலை அணிவிக்கப்பட்டது. பங்குனி உத்திரத்தன்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப் பெருமானை வழிபட கேரளாவில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் கூடினர்.

    ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும் போது, வழிவிடும் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சமயத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பிறக்காதவர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும்போது விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Gudalur, Murugan, Temple, Theni

    அடுத்த செய்தி