Home /local-news /

கொரோனா அலை : கூடை பின்னும் தொழிலாளர்களின் வருமானம் நிலவரம் இதோ

கொரோனா அலை : கூடை பின்னும் தொழிலாளர்களின் வருமானம் நிலவரம் இதோ

கூடலூர்

கூடலூர் பகுதியில் மூங்கில் மற்றும் ஈத்தைகளில் கூடை பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

கூடலூர் பகுதியில் மூங்கில் மற்றும் ஈத்தைகளில் கூடை பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா அலை : கூடை பின்னும் தொழிலாளர்களின் வருமானம் நிலவரம் இதோ

    கூடலூர் பகுதியில் மூங்கில் மற்றும் ஈத்தைகளில் கூடை பின்னும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    கூடை பின்னும் தொழில் :-

    தேனி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில் கூடை பின்னும் தொழிலாளர்கள் கேரள மாநிலத்திலிருந்து மூங்கில் மற்றும் ஈத்தைகளை விலைக்கு வாங்கி, அதனை கூடைகள், தட்டுகள், கோழி பஞ்சாரம் மற்றும் விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தட்டுகள், தடுப்பு பாய்கள் மற்றும் விசேஷ இல்லங்களில் பயன்படும் கூடைகள் போன்றவைகளையும் செய்து வருகின்றனர்.

    இவர்கள் செய்யும் பொருள்களை தேனி மாவட்டத்தில் நடக்கும் வார சந்தைகளிலும், உழவர் சந்தைக்கு வெளியே தற்காலிக கடை அமைத்தும், தனியாக கூடை கடைகளிலும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 30 முதல் 40 கிலோ எடை கொண்ட மூங்கில் மற்றும் ஈத்தை கட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு கேரளாவிலிருந்து வாங்குவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    வருமானம் :-

    ஈத்தை மற்றும் மூங்கிலில் பொருட்கள் செய்த பின்னர் ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    நாளொன்றுக்கு 20 முதல் 30 சிறிய ரக கூடைகளை செய்ய முடியும் எனவும், 5 முதல் 10 பெரிய கூடைகளை குடும்பமாக சேர்ந்து செய்ய முடியும் என்கின்றனர் கூடை பின்னும் தொழிலாளர்கள்.

    கொரோனா காலங்களில் மிகவும் நலிவடைந்த தொழில், தற்போது சிறிய அளவில் மீண்டு வருவதாக நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர் .


    பொதுமக்கள் மூங்கில் மற்றும் ஈத்தைகளில் தயார் செய்த பொருட்களை அதிகளவில் வாங்கி ,கூடை பின்னும் தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர் .


    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி