தேனி மாவட்டம் கம்பம் தனியார் திருமண மண்டபத்தில், தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் 493 பயனாளிகளுக்கு நிதியுதவியுடன், தலா 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம் :-
கம்பம் தனியார் மீட்டிங் ஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கம்பம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட சமூக நல அலுவலர் சாரதாதேவி வரவேற்புரை ஆற்றி, தமிழக அரசு செய்து வரும் நலத்திட்ட உதவிகளை பற்றி எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட உத்தமபாளையம் தாலுகா பகுதியில் வசிக்கும் 493 பயனாளிகளுக்கு நிதியுதவியும், 8 கிராம் அளவில் தாலிக்கு தேவையான தங்கம் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் கம்பம் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் நிவேதா அண்ணாத்துரை உள்பட சமூக நலத்துறை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.