Home /local-news /

கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - தலை தெறித்து ஓடிய ஊழியர்கள்

கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - தலை தெறித்து ஓடிய ஊழியர்கள்

Fire

Fire service 

Theni District | கம்பம் நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர் .

    கம்பம் நகரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில்  கண்ணாடி விரியன் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அச்சம் - விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விட்டனர்

    கண்ணாடி விரியன் பாம்பு :-

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியின் மெயின் ரோட்டில் உள்ள  தனியார் ஜவுளி கடைக்குள், கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் வெளியேறினர். இதுகுறித்து உடனடியாக கம்பம் தீயணைப்பு துறையினருக்கு கடை நிறுவனத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் கடைக்குள் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக பாம்பைத் தேடும் பணி நடைபெற்றது பிறகு பாம்பு இருக்கும் இடம் கண்டு பிடித்து தீயணைப்புத்துறையினர் லாவகமாக பாம்பை பிடித்தனர்.

    மேலும் 4 அடிநீளம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு மிகவும் விஷத்தன்மை கொண்டதாக தீயணைப்புத் துறையினர் கூறினர்.

    விரைந்து வந்து பாம்பை பிடித்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மக்கள் நடமாட்டமுள்ள மெயின் பஜாரில் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்புத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டனர் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி