Home /local-news /

கம்பத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா!!

கம்பத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா!!

Cumbum city 

Cumbum city 

Theni District | கம்பம் நகராட்சி பகுதியில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தண்ணீர் தொட்டி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பில் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது.

    கம்பம் : 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தேக்கத் தொட்டி கட்டுதல் உட்பட மூன்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

    கம்பம் நகராட்சி பகுதியில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தண்ணீர் தொட்டி மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை கட்டுதல் மற்றும் கட்டிடங்களை பராமரித்தல் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அடிக்கல் நாட்டு விழா :-

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி 1 வது வார்டு பகுதியில் புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது . பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பரிசீலனை செய்த கம்பம் நகர மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் குழு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறையை மேற்கொண்டனர் .  அதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள உத்தமபுரம் சுவாமி விவேகானந்தர் தெரு பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில், புதிதாக 3,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான ராமகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் , கம்பம் நகராட்சி நகர மன்றத் தலைவரான வனிதா நெப்போலியன் தலைமையிலும், கம்பம் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் (2021-2022) ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்கவும், கம்பம் நகராட்சி வாரச்சந்தை அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் (2021-2022) ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை கட்டுதல் மற்றும் கட்டிடங்களை பராமரித்தல் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

    திமுக நகர்கழக, மாவட்டக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    பின்னர் கம்பம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இடையே ஆலோசனை நடைபெற்றது. மேலும் கம்பம் பகுதியில் உள்ள ஏழாவது வார்டு பகுதியில் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கம்பம் நகர தலைவர் தலைமையில் ஆய்வு பணிகளும் நடைபெற்றது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, DMK, Theni

    அடுத்த செய்தி