சித்திரை திருவிழாவையொட்டி தேனி மாவட்டத்தில் விளைந்துள்ள செண்டு பூ மற்றும் செவ்வந்தி பூக்களில் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்
தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூ விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் செண்டு பூ, சம்பங்கி பூ, கோழிக் கொண்டை பூ, மல்லிகைப்பூ உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது.
கம்பம் மற்றும் சின்னமனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளைந்துள்ள செண்டு பூ மற்றும் செவ்வந்திப்பூ நல்ல விளைச்சல் கண்டுள்ளது. தை மாதத்தில் பயிரிடப்பட்ட இந்தப் பூ தற்போது அறுவடை நிலையில் உள்ளது.
தற்போதைய சூழலில் செண்டு பூ கிலோ 20 ரூபாய்க்கும், செவ்வந்தி பூ கிலோ 50 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பொருட்கள் கம்பம் மற்றும் தேனி மார்க்கெட் வழியாக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது சித்திரை திருவிழா நெருங்கி வருவதால், தேனி மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கு விலை கிடைக்கும்என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறுவதன் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.