விவசாயிகளிடம் திராட்சை பற்றிய கருத்து கேட்பு கூட்டம் நடத்தி புதிய வகை திராட்சையை பயிரிட்டு வருவாயை இரட்டிப்பாக்க திராட்சை விவசாயிகளுக்கு தேசிய திராட்சை ஆராய்ச்சி மைய இயக்குநர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் :-
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான ஓடைப்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராயப்பன்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் நடைபெறுகிறது.
இங்கு சாகுபடி செய்யப்படும் பன்னீா் திராட்சை, அண்டை மாநிலமான கேரளம் மற்றும் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து மாதங்களிலும் திராட்சைப் அறுவடை நடைபெறும்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கிராமத்தில் திராட்சை சாகுபடி விவசாயிகளிடம் கருத்து கேட்கும் நிகழ்வும் , திராட்சை மதிப்பு கூட்டல் தொடர்பான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்க கூட்டத்தில் கம்பம் பகுதியை சுற்றியுள்ள திராட்சை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கம்பம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி கிராமத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனேவில் உள்ள தேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சோம்குவார் கலந்து கொண்டு திராட்சை விவசாயிகளுக்கு திராட்சை சாகுபடி குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
தேனி மாவட்டத்தில் அதிகளவில் பண்ணீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கம்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திராட்சை விளைச்சல் நன்றாக இருந்தாலும், கருப்பு பன்னீர் திராட்சை இரண்டு ரகத்தில் விளைகிறது. கருப்பு பன்னீர் திராட்சை 40 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது எனவும்
புதிய ரகம் :-
விவசாயிகள் திராட்சை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவுரைப்படி திராட்சை விவசாயத்தை மேற்கொண்டால் அதிகப்படியான லாபத்தை ஈட்ட முடியும் எனவும் தேசிய திராட்சை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சோம்குவார் கூறினார்.
மேலும், மஞ்சரி மெடிக்கா என்னும் புதிய ரக திராட்சையை இப்பகுதி விவசாயிகள் விளைவித்து அதிக மகசூலை பெறவும் ஆலோசனை வழங்கினார். இந்த புதிய ரக திராட்சை அனைத்து காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற நல்ல மகசூலைத் தருவதாகவும் கூறினார்.
இந்த வகை திராட்சை ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் மகசூல் தருவதாகவும், இதில் வரும் கழிவுகளை வீணாக்காமல் பழச்சாறுக்கு பிறகு, இருக்கும் எஞ்சிய தோல் மற்றும் விதைகள் பிரிக்கப்பட்டு ஐஸ்கிரீம், தயிர் போன்ற பால் பொருட்களை வளப்படுத்தவும் , மிட்டாய் கேக் உள்ளிட்டவற்றை தயாரிப்பதற்கும் பயன்படுவதாக தெரிவித்தார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.