தமிழக முதல்வர் மு க
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேவாரம் பகுதியில்
திமுகவினர் சார்பாக இரட்டை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
இரட்டை மாட்டு வண்டி பந்தயம் :-
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
தமிழகத்தின் முதல்வரான மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை நடத்திவந்தனர் . அதனைத் தொடர்ந்து தேவாரம் பகுதியில் திமுகவின் பேரூர் கழக செயலாளரான பால்பாண்டி தேவாரம் பகுதியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 7 வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது. தேவாரம் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
போடிநாயக்கனூர் - தேவாரம் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயமானது, நாட்டு மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,புள்ளி மான், பெரிய மாடு, நடு மாடு, தட்டான் சிட்டு உள்ளிட்ட 7 வகையான மாடு வகைகளை கொண்டு, 7 பிரிவாக தனித்தனியாக நடைபெற்றது.
7 பிரிவு மாடுகள் பங்கேற்பு :-
இந்த மாட்டு வண்டி பந்தயம் ஆனது திமுக தேனி தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ராமகிருஷ்ணன் தலைமையிலும், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினரான மகாராஜன் தலைமையிலும் இரட்டை மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது.
இதில் பெரிய மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 30,000 வரை ரூபாய் வழங்கப்பட்டது.
வெற்றி பெறும் நபர்களுக்கு மாடு பங்கேற்ற பிரிவின் அடிப்படையில் பரிசு தொகை மாற்றம் பெறும் அந்த வகையில்,
பெரிய மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 30, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 25,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 20,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
நடு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 25, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 20,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 15,000 ரூபாயும் வழங்கப்பட்டது
பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 10,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 8,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 6,000 ரூபாயும் வழங்கப்பட்டது
கரிச்சான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 15,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 12,000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 8000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 6000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 4000 ரூபாயும் வழங்கப்பட்டது
தட்டான் சீட்டு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 6, 000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 4,000 ரூபாயும் வழங்கப்பட்டது
பார்வையாளர்கள் ஆரவாரம் :-
அதே போல் புள்ளி மான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 4000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்த 7 வகையான மாட்டுப் பந்தயம் போட்டிகளிலும் கலந்து கொண்டு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை பெறும் நபர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட உள்ளது.
இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் போலீசாரின் பாதுகாப்புடனும் நடைபெற்றது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.