தேனி மாவட்டம், கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ( 29/03/2022) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை :-
தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை ( செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் கோட்டூர், கூளையனூர், சீலையம்பட்டி, காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, தர்மாபுரி, வெள்ளையம்பாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை ( 29.03.2021) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
இதனால் கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் , தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.