Home /local-news /

இன்றைய தேனி மாவட்ட செய்திகள், அக்டோபர் 16

இன்றைய தேனி மாவட்ட செய்திகள், அக்டோபர் 16

இன்றைய

இன்றைய தேனி மாவட்ட செய்திகள், அக்டோபர் 16

இன்றைய தேனி மாவட்ட செய்திகள், அக்டோபர் 16

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செய்தி 1 :-

    விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு - நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்று தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. இதில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான உத்தமபாளையம், சின்னமனூர், கூடலூர் சுற்று வட்டாரத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கரில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

    கூடலூர் தாமரைக்குளம், வெட்டுக் காடு, பார வந்தான், பி.டி.ஆ.வட்டம், ஒழுகுவழி, மரப்பாலம், ஒட்டான்குளம் பகுதியில் மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் விவசாயம் நடக்கிறது.

    முதல் போக பாசனத்திற்காக கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தண்ணீர்
    திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடவு செய்யப்பட்ட முதல் போக நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு
    வருகிறது.

    இந்த நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்தனர்.

    இதற்கிடையே, உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நெல் கொள்முதல் நிலையம் திறப்பில் காலதாமதம் ஆனது. இதனால் விவசாயிகளும் நெல் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    கொள்முதல் நிலையம் :-

    நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம்
    அமைக்க மாவட்ட ஆட்சியர் முரளிதரன், தேனி மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள்
    வாணிபக் கழக அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    இந்நிலையில், கூடலூர் 1வது வார்டு அரசமரம் அருகே சமுதாய களத்தில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்
    திறக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

    இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு,
    விவசாயிகளின் வங்கி கணக்கில்
    24 மணி நேரத்தில் பணம்
    செலுத்தப்படும் என
    அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செய்தி 2 :-

    கொரோனா அலை : கூடை பின்னும் தொழிலாளர்களின் வருமானம் நிலவரம் இதோ

    தேனி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பகுதியில் கூடை பின்னும் தொழிலாளர்கள் கேரள மாநிலத்திலிருந்து மூங்கில் மற்றும் ஈத்தைகளை விலைக்கு வாங்கி, அதனை கூடைகள், தட்டுகள், கோழி பஞ்சாரம் மற்றும் விவசாயம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தட்டுகள், தடுப்பு பாய்கள் மற்றும் விசேஷ இல்லங்களில் பயன்படும் கூடைகள் போன்றவைகளையும் செய்து வருகின்றனர்.

    இவர்கள் செய்யும் பொருள்களை தேனி மாவட்டத்தில் நடக்கும் வார சந்தைகளிலும், உழவர் சந்தைக்கு வெளியே தற்காலிக கடை அமைத்தும், தனியாக கூடை கடைகளிலும் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். 30 முதல் 40 கிலோ எடை கொண்ட மூங்கில் மற்றும் ஈத்தை கட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு கேரளாவிலிருந்து வாங்குவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    வருமானம் :-

    ஈத்தை மற்றும் மூங்கிலில் பொருட்கள் செய்த பின்னர் ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    நாளொன்றுக்கு 20 முதல் 30 சிறிய ரக கூடைகளை செய்ய முடியும் எனவும், 5 முதல் 10 பெரிய கூடைகளை குடும்பமாக சேர்ந்து செய்ய முடியும் என்கின்றனர் கூடை பின்னும் தொழிலாளர்கள்.

    கொரோனா காலங்களில் மிகவும் நலிவடைந்த தொழில், தற்போது சிறிய அளவில் மீண்டு வருவதாக நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர் .

    பொதுமக்கள் மூங்கில் மற்றும் ஈத்தைகளில் தயார் செய்த பொருட்களை அதிகளவில் வாங்கி ,கூடை பின்னும் தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கின்றனர் .

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Gudalur, Theni, Today news

    அடுத்த செய்தி