Home /local-news /

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள்...!!

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள்...!!

Theni news 

Theni news 

Theni District | தேனி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

    தேனி மாவட்டத்தில்  இன்று (07/04/22) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒருசில வரிகளில்...

    தேனியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் :-

    தேனி நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரியை ரத்து செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் இதுவரை 50 சதவீதத்தில் இருந்த சொத்து வரியினை 150 சதவீதமாக உயர்த்திட அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து புதிய தமிழக கட்சியின் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக அரசின் அநியாய சொத்து வரி உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வு அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நாகையகவுண்டன்பட்டி ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு :-

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபா ராமராஜ் தலைமை தாங்கினார். எதிர்வரும் மழைகாலங்களில் மழைநீரை சேகரிப்பது பற்றியும், கோடைகாலங்களில் இருக்கும் தண்ணீரை சேகரிப்பது பற்றியும், வீடுகளில் இருந்து வெளியேறும் மழை நீரை தொட்டிகள் அமைத்து சேகரித்தல் பற்றியும் உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன் விளக்கி பேசினார். கிராம மக்கள் மத்தியில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நிலத்தடி நீர் சேகரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிகழ்வில் ஊராட்சி துணை தலைவர் சேகர், மற்றும் ஊராட்சி செயலர் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் கொடியேற்றம் :-

    தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் . அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 16, 17 7ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது

    இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்களுடன் தொடங்கி
    கொடிமரத்திற்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் சிவா கோசம் ஒலிக்க சித்திரைப் பெருந் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

    பூக்கள் விலை உயருமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்! :-

    தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூ விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் செண்டு பூ, சம்பங்கி பூ, கொண்டை பூ, மல்லிகைப்பூ உள்ளிட்ட பல்வேறு பூக்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவித்த பூக்கள் நல்ல விளைச்சலை கண்டுள்ளது. தற்போது சித்திரை திருவிழா நெருங்கி வருவதால், தேனி மாவட்டத்தில் விளையும் பூக்களுக்கு விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறுவதன் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    கம்பத்தில் குடிநீர் தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா :-

    தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள உத்தமபுரம் சுவாமி விவேகானந்தர் தெரு பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில், புதிதாக 3,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

    அதனைத் தொடர்ந்து கம்பம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையில் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் (2021-2022) ரூபாய் 47 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்கவும்,
    கம்பம் நகராட்சி வாரச்சந்தை அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் (2021-2022) ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு அறை கட்டுதல் மற்றும் கட்டிடங்களை பராமரித்தல் போன்ற திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், கம்பம் நகராட்சி நகர மன்றத் தலைவரான வனிதா நெப்போலியன் தலைமையிலும், கம்பம் நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

    கோவில்களில் இன்று(07/04/22) ...

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலுள்ள கம்பராய பெருமாள் கோவிலில் இன்று காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை எட்டு முப்பது மணி அளவில் சிறப்பு பூஜை மற்றும் காலை பூஜை நடைபெற்றது. அதேபோல இன்று மாலை 6 மணிக்கு மாலை பூஜை வழக்கம்போல் நடைபெற்றது.

    சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில் , வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. இன்று இரவு ஏழு மணிக்கு சாயரட்சை வழிபாடும் நடைபெற உள்ளது . இரவு எட்டு முப்பது மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.

    தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா காலை 8 மணிக்கு தொடங்கி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை ஐந்து முப்பது மணிக்கு தங்க பல்லக்கு வாகனத்தில் சாமி நகர்வலம் நடைபெற்றது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி