Home /local-news /

செவிலியர் விடுதிக்கு அடிக்கல்.. வீரபாண்டி திருவிழா ஆலோசனை கூட்டம்.. தேனி மாவட்டத்தில் ( 2-5-22) இன்றைய நிகழ்வுகள், முக்கிய செய்திகள்.!

செவிலியர் விடுதிக்கு அடிக்கல்.. வீரபாண்டி திருவிழா ஆலோசனை கூட்டம்.. தேனி மாவட்டத்தில் ( 2-5-22) இன்றைய நிகழ்வுகள், முக்கிய செய்திகள்.!

Theni government hospital 

Theni government hospital 

Theni District | தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்தி தொகுப்பு

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்த செய்தி தொகுப்பு..

    தற்கொலை மிரட்டல் :-

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் நபர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.

    தேனி அரசு மருத்துவமனையின் பராமரிப்பு பணிகளை கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளிகள் மருத்துவமனையில் துப்புரவு பணி, பராமரிப்பு பணி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளியான செல்வம் லிப்ட் இயக்குபவராக பணி செய்து வந்துள்ளார். தற்போது இவருக்கு மாற்றாக வேறு ஒரு நபர் நியமிக்கப்பட்டு இவர் ஸ்ட்ரக்சர் தள்ளும் பணிக்கு மாற்றப் பட்டதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளியான இவருக்கு இந்த பணியை செய்வது கடினம் என்பதால், திடீரென மருத்துவமனை மாடியின் மேல் ஏறி பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார்

    இதனால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள், மற்றும் காவல்துறையினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பத்திரமாக மீட்டனர்.

    பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயில் விழா :-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் 48-வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் நர்தன கணபதி, கிருஷ்ணர், மூஞ்சுர் வாகனம், அகத்தியர் , சீதா மகாதேவி ஆகியசாமி சிலைகள் வைக்கப்பட்டு அதற்கு 48 நாள் மண்டல பூஜை முன்னிட்டு செம்பால் அழங்கரிக்கப்பட்ட ஓமகுண்டங்களை வைத்து அத்திக்குச்சி, அடிமரத்து குச்சி, சந்தனமரத்து குச்சி, வள்ளி மரக்குச்சி, அத்திமரக் குச்சி, பலா மரக்குச்சி, பூவரசு மரக்குச்சி உள்ளிட்ட 12 விதமான மரக்குச்சிகளை ஓமக்குண்டத்தில் வைத்து 1008 தேன் தாமரை பூக்கள் ஓமக்குண்டத்தில் போடப்பட்டு 1008 ஒரு ரூபாய் நாணயங்களை போடப்பட்டு சுத்தமான நாட்டு பசுநெய்யால் ஓமங்கள் வழக்கப்பட்டன. இந்த கோயிலில் உள்ள அனைத்து பூஜை ஏற்பாடுகளை டாக்டர் எ.எஸ்.மகாஸ்ரீ ராஜன் செய்ந்திருந்தார்

    செவிலியர் விடுதி :-

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 12 லட்சம் மதிப்பீட்டில், கம்பம் அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதி அமைவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. கம்பம் பகுதியில் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளதையடுத்து செவிலியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    தேநீர் விலை உயர்வு :-

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாய கூலிகளாக இருக்கும் பட்சத்தில், ஒரு நபர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ 12 ரூபாயாக விலை ஏற்றம் கண்டது. தற்போது 3 ரூபாய் விலை ஏற்றப்பட்டு 15 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது. ஏன் ஒரு சில கடைகளில் 20 ரூபாய்க்கு கூட விற்கப்பட்டு வருகிறது.

    15 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபியின் விலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட வடை தற்போது பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே நிலைமை தான் இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றவைகளுக்கும்.
    இனிப்பு கார விலை தற்போது 20 ரூபாய் அதிகரித்துள்ளது . இந்த விலையேற்றம் தற்போது ஏற்பட்டது இல்லை என்றாலும், படிப்படியாக அனைத்து இடங்களிலும் தற்போது விலை ஏற்றம் அடைய தொடங்கி வருகிறது.

    ஆலோசனை கூட்டம் :-

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கெளமாரியம்மன் திருக்கோயிலில் 10. 05. 2022 முதல் 17. 05. 2022 வரை சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. திருவிழாவின் போது தற்காலிக கடைகளை முறைப்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே கடைகளை அமைத்திடவும், தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தற்காலிகச்சான்றிதழ் வழங்கிடவும் தற்காலிக கடைகள் அனைத்தும் தீ பற்றாத வகையில்
    அமைக்கப்பட வேண்டும். உணவு பண்டங்கள் விற்பனை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற கடைகளில் அடுப்புகள் பற்ற வைத்தல் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி