Home /local-news /

இன்றைய தேனி மாவட்ட செய்திகள் 

இன்றைய தேனி மாவட்ட செய்திகள் 

Today

Today theni news

தேனி மாவட்டம் கூடலூரில் ஆண்டிற்கு ஒரு முறை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செய்தி 1 :-

    நிரந்தர தீர்வு - போக்குவரத்து காவல் பூத் கம்பத்தில் திறப்பு


    தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் - கட்டப்பனை பிரிவு மிக முக்கிய இடமாகும். கம்பம் நகரில் இருந்து கம்பம்மெட்டு, கட்டப்பனை, நெடுங்கண்டம் போன்ற கேரளா பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் செல்லும் முக்கிய பிரிவாகும். மேலும் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு அதிகளவிலான பக்தர்கள் செல்வது வழக்கம்.

    அதன்படி, தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியாக பயணிக்கும் போது இந்த கம்பம் - கட்டப்பனை பிரிவில் இருந்து பயணிப்பர். சபரிமலைக்கு அதிக அளவிலான வாகனங்கள் வரும்போது இந்தப் பகுதி மிகவும் சிக்கலான இடம் என்பதால் தற்காலிகமாக போக்குவரத்து காவல் பூத் அமைக்கப்பட்டு வந்தது.

    இதற்கு நிரந்தரத் தீர்வாக இந்த பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாகவும் கம்பம் - கட்டபணை சந்திக்கும் பிரிவின், பழைய தபால் நிலையம் அருகே புதியதாக போக்குவரத்து காவல் பூத் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து காவல்துறை பூத்தை உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா திறந்து வைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் மற்றும் மூலிகை குடிநீரை காவலர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் ஏராளமான போலீஸார் கலந்து கொண்டனர்.

    செய்தி 2 :-

    கூடலூர் : களைகட்டிய முத்தாலம்மன் கோவில் திருவிழா - உற்சாக அலை


    தேனி மாவட்டம் கூடலூரில் ஆண்டிற்கு ஒரு முறை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக திருவிழா தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இரு ஆண்டுகளுக்கு பிறகு கூடலூரில் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. மூன்று தினங்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பெண்கள் அதிகாலை முதலே மாவிளக்கு எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். மேலும், அம்மனுக்கு முளைப்பாரி, கரகம் போன்றவைகளையும் எடுத்து அம்மனை வழிபடுவர்.

    மூன்றாவது நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தோன்றுவதுடன், மூன்றாவது நாள் நிறைவில் அம்மன் சிலையானது ஊருக்கு வெளியே உடைக்கப்படுவது வழக்கம்.

    இரு ஆண்டுகளுக்கு பின்பு கோவில் திருவிழா நடத்தப்படுவதால், மூன்றாவது நாள் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் உற்சாக அலை கரை புரண்டு ஓடியது. இந்தத் திருவிழாவானது போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.

    திருவிழா நடைபெறும் போது கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் காவல்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி