Home /local-news /

ஓடையில் கவிழ்ந்த ஆட்டோ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆட்டோ ஓட்டுனர் 

ஓடையில் கவிழ்ந்த ஆட்டோ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆட்டோ ஓட்டுனர் 

Accident 

Accident 

Theni District | கம்பம் வழியாக கேரள மாநிலம் கம்பம்மெட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ டிரைவரின் கவனக்குறைவால் கம்பம் சேனை ஓடையில் தலைகுப்புற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தேனி மாவட்டம் , கம்பத்திலிருந்து கேரளா மாநிலம் செல்லும் சாலையில் கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட மூன்று பேர் காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விபத்து :-

    கம்பம் வழியாக கேரள மாநிலம் கம்பம்மெட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, ஆட்டோ டிரைவரின் கவனக்குறைவால் கம்பம் சேனை ஓடையில் தலைகுப்புற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கேரள மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவில் , கம்பம்மெட்டு அருகில் உள்ள கேரள மாநிலம் ராமக்கல்மேடு பகுதியை சேர்ந்த மூன்று நபர்கள் கம்பம் பகுதிக்கு சொந்த வேலைக்காக வந்துள்ளனர் .

    பின்பு வேலையை முடித்து கேரளா செல்வதற்காக கம்பம்மெட்டு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுனரின் கவனக் குறைவால் ஆட்டோ நிலைதடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்தது .ஆட்டோவை கேரள மாநிலம் ராமக்கல்மேடு பகுதியை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

    இந்த விபத்தில் பயணம் செய்த டிரைவர் உள்பட மூன்று நபர்களும் காயமின்றி உயிர் தப்பினர். உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் மூன்று நபர்களையும் மீட்டு ஆட்டோவை சாலைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர் .

    செய்தியாளர்:   சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Accident, Theni

    அடுத்த செய்தி