தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்திடும் பொருட்டு, பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பதற்கான முகாம் நடைபெற உள்ளது.
இலவச பஸ் பாஸ் முகாம் :-
தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் ஆணையின்படி மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுள்ள அனைவரும் நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்திடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்து கழகத்தால் ஏற்கனவே பேருந்து பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் புதுப்பித்தல் செய்திடும் பொருட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் 29.03.2022 மற்றும் 30.03.2022 ஆகிய தினங்களில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெவுள்ளது.
இம்முகாமில் புதுப்பித்தல் செய்ய வேண்டிய பயனாளிகள் அசல் பஸ்பாஸ் உடன் கீழ்கண்ட சான்றுகளுடனும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 உடனும் வந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இம்முகாம் குறித்த விபரத்தினை தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் அல்லது பொதுமக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இது குறித்து தெரிவித்து, அவர்களை பயன்பெற செய்திடுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.