Home /local-news /

தேனி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 4) மின்தடை செய்யப்படும் இடங்கள் இவை தான்!!

தேனி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 4) மின்தடை செய்யப்படும் இடங்கள் இவை தான்!!

Power cut

Power cut

Theni District | தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    தேனி மாவட்டம், தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று ( 04.04.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் இருக்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தேவாரம் துணை மின் நிலையத்தில் இன்று ( திங்கட்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக,பொம்மிநாயக்கன்பட்டி, தேவாரம், மீனாட்சிபுரம், போ.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி தே.சிந்தலைச்சேரி, ஓவுலாபுரம் தம்மிநாயக்கன்பட்டி, தே.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, பி ஆர் புரம், செல்லாயிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்றூ காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி