Home /local-news /

PM Kisan திட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி பெற ஆதாரை புதுப்பிக்க வேண்டியது அவசியம் - தேனி மாவட்ட நிர்வாகம்

PM Kisan திட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி பெற ஆதாரை புதுப்பிக்க வேண்டியது அவசியம் - தேனி மாவட்ட நிர்வாகம்

Farmers 

Farmers 

PM Kisan Samman Nidhi | விவசாயிகளுக்கான நிதித் திட்டத்தின் கீழ், 11வது தவணை தொகையை விவசாயிகள் பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம்

    மத்திய அரசால் PM Kisan Samman Nidhi திட்டத்தின் கீழ் வழங்கப்படும்  நிதி உதவியை விவசாயிகள் பெற, விவசாயிகளின் ஆதார் எண்ணை புதுப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    பி.எம் கிசான் சம்மான் திட்டம் :-

    தேனி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் உள்ள 43,634 விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 10 தவணை வரை விவசாயிகள் தொகைகளை பெற்றுள்ளனர்.

    விவசாயிகளுக்கான கவுரவ நிதித் திட்டத்தின் கீழ், 11வது தவணை தொகையை விவசாயிகள் பெறுவதற்கு விவசாயிகளின் ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம் என அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது

    இதனால் விவசாயிகள் pmkisan.tm.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் கடவு எண் மூலம் புதுப்பிக்க வேண்டும். ஆதாருடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையங்களில் ஆதார் விபரங்களைக் கொண்டு விரல் ரேகையினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த சேவைக்கு இ-சேவை மையங்களில் கட்டணமாக ரூபாய் 15 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் ஆதார் எண் விபரங்களை மார்ச் மாதம் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்து புதுப்பித்து பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Farmers, Theni

    அடுத்த செய்தி