தேவதானப்பட்டி: பூட்டியிருந்த 3 கடைகளில் தீ விபத்து - காவல்துறையினர் விசாரணை
தேவதானப்பட்டி காவல் நிலையம் எதிரே பூட்டியிருந்த 3 கடைகளில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து தேவதானபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து :-
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள காவல் நிலையம் எதிரே உணவகம் மற்றும் பெட்டிக்கடை இருந்தது. இந்நிலையில் நேற்று உணவகத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பரவி அருகே இருந்த கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் பெட்டிக் கடைகளிலும் பரவியது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பாய்ச்சி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேர முயற்சிக்கு பின் தீ அணைக்கப்பட்டு, அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த தீ விபத்தினால் கம்ப்யூட்டர் சென்டர், உணவகம் மற்றும் பெட்டி கடை ஆகிய மூன்று கடைகளும் முழுவதும் எரிந்தது. எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.