தேனி : 19 - வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் - 378 இடங்களில் செலுத்த ஏற்பாடு
தமிழகமெங்கும் இன்று 19-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும் நிலையில், தேனி மாவட்டத்தில், 378 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது .
மாபெரும் தடுப்பூசி முகாம் :-
தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விடுபட்ட நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் இன்றைய தினம் ( 22.01.2022) சனிக்கிழமை 19 - வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, ஆண்டிபட்டி வட்டாரத்தில் 63 இடங்களிலும், போடிநாயக்கனூர் வட்டாரத்தில் 60 இடங்களிலும், சின்னமனூர் வட்டாரத்தில் 45 இடங்களிலும், கம்பம் வட்டாரத்தில் 43 இடங்களிலும், க.மயிலாடும்பாறை வட்டாரத்தில் 26 இடங்களிலும், பெரியகுளம் வட்டாரத்தில் 60 இடங்களிலும், தேனி வட்டாரத்தில் 43
இடங்களிலும், உத்தமபாளையம் வட்டாரத்தில் 38 இடங்களிலும் என மொத்தம் மாவட்டத்தில் 378 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மாபெரும் தடுப்பூசி முகாம்களின் மூலம் 73,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 19, 650 கோவாக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 92, 650 தடுப்பூசிகள் செலுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் ( 22.01.2022) நடைபெறவுள்ள 19 -வது கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 18 வயது பூர்த்தியடைந்து, இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விடுபட்ட நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தக் கூடிய நபர்களும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாத்திட வேண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று 3 ஆம் அலையை தடுத்திடும் பொருட்டும் தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.