தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள புகழ்பெற்ற சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
சித்திரை திருவிழா :-
சின்னமனூரில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புபெற்ற சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில்.
இத்திருக்கோவில் பிரசத்தி பெற்ற சிவ தலங்களில் மிகவும் பழமையானதாகும். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இத்திருக்கோவிலில் தினசரி 6 கால பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக தென்பகுதியில் இத்திருக்கோயில் தான் ஆறுகால பூஜைகள் சிவபெருமானுக்கு நடைபெறுகிறது.
இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதங்களில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் . அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 16, 17 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்களுடன் இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கொடிமரத்திற்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் சிவா கோசம் ஒலிக்க சித்திரைப் பெருந் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.
தினந்தோறும் அனைத்து சமுதாயத்தினரின் மண்டகப்படி மற்றும் சுவாமி நகர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையே வருகின்ற 14ம் தேதி சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும், 16 மற்றும் 17ம் தேதிகளில் சித்திரை தேரோட்டம் சின்னமனூர் நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, தட்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.