Home /local-news /

போடிநாயக்கனூர் : அணைபிள்ளையார் அணையில் அதிகாரிகள் ஆய்வு

போடிநாயக்கனூர் : அணைபிள்ளையார் அணையில் அதிகாரிகள் ஆய்வு

தேனி

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் உள்ள அணைபிள்ளையார் தடுப்பு அணையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால், தடுப்பணை பகுதியில் அரிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் உள்ள அணைபிள்ளையார் தடுப்பு அணையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால், தடுப்பணை பகுதியில் அரிப்பு ஏற்பட்டது.

    போடிநாயக்கனூர் : அணைபிள்ளையார் அணையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

    போடி நாயக்கனூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால், அணை பிள்ளையார் அணைப் பகுதியில் உருவான காட்டாற்று வெள்ளத்தால் தடுப்பணையில் சில பகுதிகள் சேதமடைந்தன. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    திடீர் மழை :-


    தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் பகுதியில் உள்ள அணைபிள்ளையார் தடுப்பு அணையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால், தடுப்பணை பகுதியில் அரிப்புகள் ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்து தடுப்புகள் உடையும் நிலையில் இருந்தது.

    இந்த நிலையில், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் விதமாக 4.90 லட்சம் நிதி ஒதுக்கி சேதம் அடைந்த அணைபிள்ளையார் தடுப்பு அணையில் தற்போது சீர்மைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சீரமைப்பு பணிகளை பொது பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியகுளம் செயற்பொறியாளர், தேனி உதவி செயற்பொறியாளர் சௌந்தரம்,
    உதவி பொறியாளர் ஸாம்சுந்தர் மற்றும் மதுரை மண்டல பொதுப்பணித்துறை இணை இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி