Home /local-news /

போடிநாயக்கனூர்: தேர்தல் அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

போடிநாயக்கனூர்: தேர்தல் அலுவலர்கள் மீது குற்றச்சாட்டு - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

திமுக

திமுக சதி செய்வதாகவும், தேர்தல் அதிகாரிகள் நியாயமான முறையில் மனுவை பரிசீலனை செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வேட்பாளரின் கணவர் போடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார்.

    போடிநாயக்கனூர் நகராட்சியில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்வதில் தேர்தல் அலுவலர்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுமுன் தினத்துடன் நிறைவடைந்த நிலையில், நேற்று பரிசீலனை நடைபெற்றது. இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுக-திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில் , போடிநாயக்கனூரில் உள்ள 24வது வார்டு அதிமுக சார்பாக போட்டியிடும் தாரணி சரவணன் அளித்த வேட்புமனுவில் ஆதார் முகவரியும் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியும் வேறுபாடு உள்ளதால் அவரது மனுவை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

    திமுக சதி செய்வதாகவும், தேர்தல் அதிகாரிகள் நியாயமான முறையில் மனுவை பரிசீலனை செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வேட்பாளரின் கணவர் போடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார்.

    போடி நகர் காவல் துறை ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து, வேட்பாளரின் கணவர் சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது வேட்புமனு மீண்டும் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    வேட்பாளர் வேட்பு மனுவில் உள்ள பிழையை சரி செய்து தருவதாக கூறியதை அடுத்து அவரது மனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்

    அதிமுக நிர்வாகிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முற்பட்டு , காவல்துறையினரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தியது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி