Home /local-news /

கூடலூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்..

கூடலூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்..

கூடலூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்..

கூடலூரில் பாஜகவினர் பட்டாசு வெடித்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம்..

Theni BJP | பாஜக  நிர்வாகிகள்  கூடலூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.

    நடந்த முடிந்த 5 மாநில தேர்தல்களில்,நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்பதை கொண்டாடும் விதமாக தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    வெற்றிக் கொண்டாட்டம் :-

    உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்து தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10)வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்த முக்கியமான தேர்தலாக இது பார்க்கப்பட்டது.

    5 மாநிலதேர்தலில் பாஜக 4 மாநிலங்களிலும் ஆம் ஆத்மி ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலதேர்தலில் 273 இடங்களில் பாஜககைப்பற்றிமீண்டும் ஆட்சி அமைத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.

    அதேபோல மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களிலும் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

    5 மாநில தேர்தலில் பாஜகபெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றதைகொண்டாடும் விதமாக நாடுமுழுவதும் பாஜகவினர்வெற்றியை இனிப்புகள்வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள பாஜகநிர்வாகிகளும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் இனிப்புகள்வழங்கியும் கோஷம் எழுப்பியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கூடலூர் நகர பாஜகநிர்வாகிகள் கூடலூர் நகரில்மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர்.

    இதில் கூடலூர் நகர் தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் எண்ணற்ற பாஜகநகர பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: BJP, Election, Gudalur, Theni

    அடுத்த செய்தி