Home /local-news /

கம்பம் நகரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது 

கம்பம் நகரில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது 

Bharath

Bharath banth

Theni District | தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய சாலை மறியலில், நூற்றுக்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    தேனி மாவட்டம் கம்பம் சிக்னல் அருகில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நடத்திய சாலை மறியலில், நூற்றுக்கும் அதிகமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    வேலை நிறுத்தம் :-

    INTUC, AITUC, CITU, AIUTUC உட்பட 9 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார்மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் கம்பம் பகுதி தலைவர் முருகேசன் தலைமையில்,ஏ.ஐ.டி.யூ.சி (அரசு போக்குவரத்து கழகம்) தொழிற்சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் ஆதிமூலம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் காந்தி சிலையில் இருந்து புறப்பட்டு சிக்னல் அருகே வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அங்கு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி சாலையை மறியல் ஈடுபட்டனர். உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமானோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Protest, Theni

    அடுத்த செய்தி