Home /local-news /

கம்பம் பனிமனையில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கம் - மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு..

கம்பம் பனிமனையில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கம் - மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு..

Bus strike 

Bus strike 

Bharat Bandh - Theni Update | தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக கம்பம் போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கம்பம் பணிமனையில் இருந்து 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது

    வேலை நிறுத்த போராட்டம் :-

    நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களான INTUC, AITUC, CITU, AIUTUC உட்பட 9 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்க 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவது என்ற முடிவு செய்யப்பட்டது.

    மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை கைவிடுமாறு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் அறிவிக்கப்பட்டு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தின், தமிழக கேரள எல்லைப் பகுதியான கம்பம் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து கேரளப் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டம் காரணமாக கம்பம் போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் :-

    காலை 11 மணி நிலவரப்படி கம்பம் போக்குவரத்து பணிமனை கிளை ஒன்றில் உள்ள 38 பேருந்துகளில் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    கம்பம் பணிமனை கிளை-2ல் உள்ள 69 பேருந்துகளில் 13 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக கம்பம் பணிமனையில் உள்ள 107 பேருந்துகளில் 15 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிமனை பேருந்துகளையும் சேர்த்து கம்பம் பகுதியில் இருந்து 300 பேருந்துகள் செல்லும் நிலையில் இன்று 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.

    இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால், காலையில் பணிகளுக்குச் செல்லும் நபர்கள் மிகவும் பேருந்து இல்லாமல் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் பேருந்து இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர்.

    குறிப்பாக குமுளி, நெடுங்கண்டம் , கம்பம்மெட்டு போன்ற பகுதிகளுக்கு கம்பம் பணிமனையில் உள்ள பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கேரளா பகுதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததால் கேரளா மாநிலத்திற்கு தமிழக பகுதியில் இருந்து தினசரி ஏலத் தோட்ட வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும், கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு வரும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Bus Strike, Cumbum, Theni

    அடுத்த செய்தி