தனியார் பள்ளியை கண்டித்து பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு..
கம்பம் தனியார் பள்ளியில் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்று செய்முறை தேர்வு எழுதவிடாமல் பள்ளியில் வெளியே நிறுத்திய கம்பம் தனியார் பள்ளியை கண்டித்து நடைபெற்ற பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்
கல்விக் கட்டணம் வசூல் :-
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களிடம் உரிய அவகாசம் வழங்கப்படாமல் கல்விக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நேற்று கம்பம் காந்தி சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பெற்றோரிடம் கடுமையாக கல்வி கட்டணம் வசூல் செய்வதாக கூறி கம்பத்தில் உள்ள சக்தி விநாயகர் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பிச்சையெடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.
மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் , அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக நாங்கள் பிச்சை எடுத்தாவது பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்த தயாராக உள்ளோம் என்றனர் போராட்டக்காரர்கள்.
இந்த போராட்டத்தில் மாநில அமைப்பாளர் அபுதாஹிர் தலைமையில், மாவட்டச் செயலாளர் உதுமான் அலி மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை கம்பம் தெற்கு காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.