தேனி மாவட்டம் குமுளி மற்றும் கம்பம் மெட்டு வழியாக தொடர்ந்து
ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் குமுளி பகுதியில் கேரளப் பகுதிக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை தமிழக போலீசார் கைப்பற்றி உள்ளனர்
அரிசி கடத்தல் :-
தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி மற்றும் கம்பம் மெட்டு வழியாக ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் கேரளப் பகுதிக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மர்ம நபர்கள் சிறிய அளவிலான பையில் மறைத்து ரேஷன் அரிசி கடத்துவதை அறிந்த போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடியில் உள்ள காவலர்கள் கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தினர். அப்போது தமிழக பகுதியில் இருந்து கேரளா நோக்கி வந்த கேரள அரசு பேருந்தில் தமிழக காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பேருந்தில் பயணம் செய்த நபர் தேங்காய் மட்டை அடங்கிய சாக்கு பையை கொண்டு சென்றுள்ளார். சந்தேகப்பட்டு சாக்கு பையை சோதனையிட்ட போலீசார், பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
சாக்குப் பைக்குள் ரேஷன் அரிசியை சிறிதாக மறைத்து வைத்து அதற்கு மேலாக தேங்காய் மட்டையை வைத்து மறைத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முற்பட்ட நபர்களிடம் இருந்து போலீசார் ரேஷன் அரிசியை கைப்பற்றினர். கைப்பற்றிய 500 கிலோ ரேஷன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல தினசரி கேரள ஏலத் தோட்ட மலை வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களது பையில் மறைத்து வைத்து ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. மலை வேலைக்கு செல்லும் பெண்களிடம் இருந்து இதுவரை 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.