Home /local-news /

தேனி: கொலையாளியின் வீட்டிலேயே புதைக்கப்பட்ட பக்கத்துவீட்டு பெண்

தேனி: கொலையாளியின் வீட்டிலேயே புதைக்கப்பட்ட பக்கத்துவீட்டு பெண்

murdered

murdered woman

 கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண் கொலை செய்யப்பட்டு, கொலையாளியின் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண் கொலை செய்யப்பட்டு, கொலையாளியின் வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை சம்பவம் :-

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசு கள்ளர் பள்ளி தெருவில் குடியிருந்து வருகிறார் 45 வயதாகும் முத்துப்பேச்சி. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என முத்துப்பேச்சியின் தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகே வசித்து வந்தவர் 26 வயதாகும் மனோஜ்.  இவர், தினமும் கேரள மாநிலத்திற்கு வேலைக்கு செல்வது வழக்கம். மனோஜ் என்பவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

    முத்துப்பேச்சி காணாமல் போன நாளில் இருந்தே போதை பழக்கத்திற்கு அடிமையான மனோஜின் நடத்தை சந்தேகப்படும்படியாக இருந்ததால், முத்துப்பேச்சியின் உறவினர்கள்,  மனோஜின் மீது புகார் அளித்தனர்.

    புகாரை விசாரிக்க வந்த போலீஸாருக்கு, முத்துப்பேச்சி கொலை செய்யப்பட்டு மனோஜ் வீட்டிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.  இதனையடுத்து, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் விசாரணை செய்து புதைத்த இடத்தில் பெண்ணின் உடலை  தோண்டி எடுத்தனர்.

    இந்த நிலையில்,  முத்துப்பேச்சியை கொலை செய்ததாக கூறி, கூடலூர் காவல் நிலையத்தில் மனோஜ் சரண் அடைந்தார்.
    சரணடைந்த மனோஜிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெண் கொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Gudalur, Murder, Theni

    அடுத்த செய்தி