Home /local-news /

தேனி : ஆறு நகராட்சியிலும் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடரும் சிக்கல்

தேனி : ஆறு நகராட்சியிலும் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடரும் சிக்கல்

Women candidate 

Women candidate 

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உட்பட நகராட்சிப் பகுதியில் 50 சதவீத வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பல கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர் .

    தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி தலைவர் பதவிகள் நகராட்சி வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு போன்றவைகளால் பெண் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பான குழப்பத்தில் சில பிரதான கட்சிகளும் உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் களப்பணியை தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சி பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால், பெண் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றது.

    தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிகளில் உள்ள வார்டுகளில், 50% பெண்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் பொதுப்பிரிவு ஆதிதிராவிடர் பெண்களுக்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கூடலூர் நகராட்சியில், 5, 6, 9, 10, 11, 12, 13, 14, 17, 20 ஆகிய வார்டுகளில் பெண்களுக்கும், ஆதிதிராவிடர் பொதுப்பிரிவிற்கு 15வது வார்டும், பொதுப்பிரிவினருக்கு இதர வார்டுகளும் ஒதுக்கப் பட்டுள்ளது.

    கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 8, 12, 14 , 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 28, 29, 30 பெண்கள் பொது பிரிவிற்கும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 9, 13 ஆகிய வார்டுகளும், ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 33வது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது

    சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இதில் பெண்கள் பொது பிரிவினருக்கு 6,9,11,12,13,14,15,17,20,22,23 ஆகிய வார்டுகளும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 4 ,8 , 16, ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 5 ,10 ஆகிய வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 3,4,5,6,8,11,13,16,17,22,24,25,28,32,33 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 18, 27, ஆதிதிராவிடர் பொதுவிற்கு 15-வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

    தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் 2,5,10,13,15,17,18,21,22,23,24,25,28,29 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 3,7, 11, ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு 8,9 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இதில் 1,6,8,9,10,12,16,18,19,21,25,29 வார்டுகள் பெண்களுக்கும், ஆதிதிராவிடர் பெண்களுக்கு 11, 14 ,30, ஆதிதிராவிட பொது பிரிவிற்கு 13, 15 ஆகிய வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது

    கடும் குழப்பத்தில் பிரதான
    கட்சிகள் : 


    இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உட்பட நகராட்சிப் பகுதியில் 50 சதவீத வார்டுகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பல கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர் . நகர் மன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்த, சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தலைவர் பதவியை பெற பல்வேறு களப்பணிகளை செய்து வந்த நிலையில், நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் செய்வதறியாது திகைத்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    மேலும், நகராட்சியில் உள்ள வார்டுகளில் பெண் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்சியினர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    முக்கிய கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள், மனைவி, அம்மா போன்றவர்களையும் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான குழப்பத்தில் உள்ளனர் பிரதான கட்சியை சேர்ந்தவர்கள்.

    மேலும், தாங்கள் வேட்பாளராக நின்று வெற்றிபெற முடியும் என்ற நோக்கில் செயல்பட்டு வந்த நிர்வாகிகளுக்கு, குடும்பப் பெண் உறுப்பினர்களை வேட்பாளராக நிறுத்துவதில் தயக்கம் இருப்பதாகவும், பெண் உறுப்பினர்களை நிறுத்தினால் வெற்றி பெற முடியுமா என்பதும், பெரும்பாலான அரசியல் பிரமுகர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்சிப் பதவியில் போட்டியிட விருப்பம் இல்லாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் நிலவுவதால், வேட்புமனு தாக்கல் செய்வதையும் தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி