Home /local-news /

தேக்கடி : இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலர் கண்காட்சி- ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆரம்பம்

தேக்கடி : இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலர் கண்காட்சி- ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆரம்பம்

Flower

Flower shop

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி ஏப்ரல் மாதம் 1 தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், மலர் கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர் கண்காட்சி ஏப்ரல் மாதம் 1 தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், மலர் கண்காட்சி அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோடை மலர் கண்காட்சி :-

    கோடை வெயில் வாட்டி வதைக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதைப்போல தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி பகுதிக்கு தமிழக மக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும்.

    அதனைப் போலவே இந்த ஆண்டும் தேக்கடியில் 14 வது மலர்கண்காட்சி வரும் ஏப்ரல் 1 முதல் நடைபெற உள்ளது. தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், ஏப்ரல் 1 முதல் மே மாதம் 2 ம் தேதி வரை மொத்தம் 32 நாட்கள் நடைபெற உள்ளது.

    தமிழக மற்றும் கேரள பகுதியில் மிகவும் புகழ்பெற்ற இந்த மலர் கண்காட்சி கொரோனோ பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக இந்த மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொரோனா பரவல் குறைய தொடங்கியதையடுத்து இந்த ஆண்டு நடத்த முடிவு செய்துள்ளனர்.

    150க்கும் மேற்பட்ட வகை மலர்கள் :-

    இந்த மலர் கண்காட்சிக்கு கேரள மக்களை விட தமிழக மக்கள் அதிகளவில் செல்வது இந்த மலர் கண்காட்சிக்கான சிறப்பாகும். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வரை வந்து மலர் கண்காட்சியை கண்டுகளித்துள்ளனர்.

    இந்த கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற உள்ளது.

    வழக்கமாக 20,000 சதுர அடியில் நடைபெறும் இந்த மலர் கண்காட்சி இந்த ஆண்டு 30,000 சதுர அடியில் 150க்கும் மேற்பட்ட வகை மலர்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இக் கண்காட்சியில் , வேளான் கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம் , கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி, நடன நாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், காமெடி அரங்குகள், மேடை நிகழ்ச்சி, சினிமா நாடகம் உட்பட மலர் கண்காட்சி நடைபெற உள்ள அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்க கேரளாவைச் சேர்ந்த மந்திரிகளும் முக்கிய பிரமுகர்களும், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளும் வர உள்ளனர்.

    தற்போது மலர் கண்காட்சி துவங்க படுவதையடுத்து மலர் கண்காட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன், தேனி.
    Published by:Karthick S
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி