Home /local-news /

தமிழக கேரள மக்கள் கொண்டாடும் தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா!

தமிழக கேரள மக்கள் கொண்டாடும் தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா!

Devi

Devi temple 

தேக்கடி பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் தேவி கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

    தேக்கடி பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் தேவி கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தமிழக கேரள மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவது இதன் சிறப்பாகும் .

    தேக்கடி கோயில் : -

    தேனி மாவட்டம் குமுளி அருகே உள்ள தேக்கடியில் தமிழக நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ளது தேவி பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இக் கோவில் திருவிழாவை தமிழக மற்றும் கேரள பக்தர்கள் ஒன்றிணைந்து கொண்டாடுவர்.

    இரண்டு ஆண்டுகளாக கொரோனா தடை உத்தரவால் நடைபெறாமல் இருந்த திருவிழா இந்தாண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது ஏப்ரல் 24-ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    முல்லைப் பெரியாறு அணையைக் கட்டும்போது அணைக்கட்டும் தொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் இக்கோயிலை உருவாக்கிய வழிபாடு நடத்த தொடங்கினர். இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர். மேலும் இக்கோயிலில் தமிழக மற்றும் கேரள பண்பாடு பின்பற்றி திருவிழா நடைபெறுவது சுவாரசியமான நிகழ்வாகும் .

    ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அம்மன் காட்சி தருவது வழக்கம். நிறைவு நாளான இன்று பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து தேவி கோயில் வரை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக இரு மாநில பெண்கள் வந்தனர். ஷண்ட மேளம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய இரு மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

    ஆரவாரத்துடன் கோலாகலமாக திருவிழா விமர்சியாக நடைபெற்றது . மேலும் சமபந்தி போஜனம் நடந்தது.தமிழக-கேரள பொதுமக்கள் கலந்து கொண்டதால் குமுளியில் இரு மாநில காவல்துறையினர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை தேக்கடி தேவி கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    செய்தியாளர் : சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி