Home /local-news /

தேக்கடி மலர் கண்காட்சியில் இத்தனை சிறப்புகளா? பெண்கள், குழந்தைகளுடன் செல்ல வேண்டிய ஸ்பாட்..!!

தேக்கடி மலர் கண்காட்சியில் இத்தனை சிறப்புகளா? பெண்கள், குழந்தைகளுடன் செல்ல வேண்டிய ஸ்பாட்..!!

தேக்கடி

தேக்கடி மலர் கண்காட்சி

Thekkady Flower Show | இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

    தேக்கடி : பார்வையாளர்களை கவர்ந்த 14 வது மலர் கண்காட்சி மே 8 வரை நீட்டிப்பு - சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் !

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் தேக்கடி  மலர் கண்காட்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

    கோடை மலர் கண்காட்சி :-

    தமிழக பகுதியில் இருந்து கோடை காலங்களில் தேக்கடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பிரம்மாண்டமாக மலர் கண்காட்சி நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக மலர் கண்காட்சியை நடைபெறாத நிலையில் இந்தாண்டு நடைபெறுவதற்கான அனுமதியை கேரள அரசு வழங்கியது

    இதனையடுத்து தேக்கடியில் 14 வது மலர் கண்காட்சி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 14 வது மலர்கண்காட்சி தேக்கடி, குமுளி ரோட்டில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில், ஏப்ரல் 1 ம் தொடங்கி மே மாதம் 2 ம் தேதி வரை மொத்தம் 32 நாட்கள் நடைபெற இருந்தது. தற்போது மலர் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணியின் கோரிக்கைக்கு ஏற்ப மலர் கண்காட்சி மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தேக்கடி பகுதியில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மலர் கண்காட்சியை காண தமிழக மற்றும் கேரள பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்தாண்டு மலர் கண்காட்சி தொடங்கிய 20 நாட்களிலேயே ஒரு லட்சம் பார்வையாளர்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களித்து சென்றுள்ளனர்.

    மேலும் டிக்கெட் இல்லாமல் ஆதரவற்ற முதியோர்கள் ஆதரவற்ற குழந்தைகள் என பலரும் இலவசமாக இந்த மலர் கண்காட்சியை கண்டு களித்து சென்றுள்ளனர்.

    கலை நிகழ்ச்சிகள் :-

    இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மலர் கண்காட்சி என்பதால் பல்லாயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக் கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி, நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

    30,000 சதுர அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மலர்களை கொண்டு பார்வையாளர்களை கவரும் விதமாக மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சியில் பார்வையாளர்களை கவரும் விதமாக வண்ண விளக்குகள், குழந்தைகளைக் கவரும் யானை, புலி, வரிக்குதிரை போன்ற பல உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கண்காட்சி நீட்டிப்பு :-

    பெரிய ராட்டினங்கள், வணிகக் கடைகள், வேளான் கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம் , கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், இன்னிசை கச்சேரி, நடன நாட்டியம், நாட்டுப்புற பாடல்கள், காமெடி அரங்குகள், மேடை நிகழ்ச்சி, சினிமா நாடகம் உட்பட மலர் கண்காட்சி நடைபெற உள்ள அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    இந்த மலர் கண்காட்சியில் 7 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மே 2ஆம் தேதி வரை நடைபெற இருந்த மலர்கண்காட்சி தற்போது மே 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Kerala, Theni

    அடுத்த செய்தி