Home /local-news /

கம்பம் : முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய வீதிகள் 

கம்பம் : முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய வீதிகள் 

கொரோனா

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியது

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியது

    தமிழகம் மற்றும் கேரளாவில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது, திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை.

    ஊரடங்கு :-

    கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்தியது . அதணை தொடர்ந்து தற்போது 3வது ஞாயிற்றுக் கிழமையாக இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதனிடையே, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது.

    தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உணவகம், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. கம்பம் பகுதியிலிருந்து கேரள மாநிலம் குமுளி மற்றும் கம்பம்மெட்டு செல்லும் முக்கிய சாலைகளிலும், நகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் போலீசாரால் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தேவையின்றி சாலையில் சுற்றுபவர்களை போலீசார் கண்டித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.
    எப்போதும் பரபரப்பாக காணப்படும் கம்பம் நகர் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது .

    மேலும், கம்பம் பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கும் மருத்துவ தேவைகளுக்காகவும் செல்லும் நபர்களை போலீசார் அனுமதித்து வருகின்றனர். இன்று தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்திலும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் , தமிழக கேரள எல்லைப் பகுதியான கம்பம்மெட்டு குமுளி பகுதியில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் இன்றி , திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona, Lockdown, Theni

    அடுத்த செய்தி