Home /News /local-news /

தமணம்பட்டி : ஐயப்பனுக்கு படி பூஜையுடன் நடந்த, மகர விளக்கு பூஜை

தமணம்பட்டி : ஐயப்பனுக்கு படி பூஜையுடன் நடந்த, மகர விளக்கு பூஜை

சபரிமலையில்

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுவதையொட்டி, கூடலூர் அருகே உள்ள தம்மனம்பட்டி ஐயப்பன் கோவிலில் படிபூஜையுடன் சேர்ந்து மகர விளக்கு பூஜை நடைபெற்றது .

    மகர விளக்கு பூஜை :-

    கேரள மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக இன்று நடைபெறுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா தை முதல்நாள் கொண்டாடப்படுகிறது.

    சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இன்று மாலை இடப்பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி இன்று மகரவிளக்கு பூஜை நடைபெற்றது.

    வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகாதீபாராதனை நடைபெறும். இந்த மகரவிளக்கு பூஜை சபரிமலையில் மிகக் கோலாகலமாக நடக்கும்.

    இந்த நிலையில் , தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமனம்பட்டியில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் மகர விளக்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 18 படிகளைக் கொண்ட இந்த கோவிலில் படி பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜையை கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பக்தர்கள் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். வானத்தில் மகர நட்சத்திரம் உதிக்கும் நேரத்தில் ஐயப்பனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றபோது பக்தர்கள் கோஷமிட்டு ஐயப்பனை வணங்கியது மிகவும் பரவசம் அடையச் செய்தது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Gudalur, Theni

    அடுத்த செய்தி