Home /local-news /

தேனி : நிழற்குடை இன்றி அவதிப்படும் அனுமந்தன்பட்டி பொதுமக்கள் 

தேனி : நிழற்குடை இன்றி அவதிப்படும் அனுமந்தன்பட்டி பொதுமக்கள் 

Bus

Bus stop

Theni News | தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் பேருந்து பயணிகள் நிழற்குடை இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் . 

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் பேருந்து பயணிகள் நிழற்குடை இல்லாததால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் .

    நிழற்குடை :-

    உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கம்பம், உத்தமபாளையம், தேனி போன்ற வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள முறையான பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை இல்லாததால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் முழுவதுமாக சேதமடைந்து தற்போது சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது .

    அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நிறுத்துவதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாறாக இந்தப் பகுதியில் நகரப்பேருந்து மட்டுமே பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக கூறுகின்றனர்.

    நகரப் பேருந்துகள் அனைத்து நேரங்களிலும் இல்லாமல் சில கால இடைவெளிகளில் இருப்பதால் வெளியூர்களுக்குச் செல்ல நினைக்கும் இப்பகுதி மக்கள் நீண்ட நேரமாக நிழற்குடை இல்லாததால் கடும் வெயில் மற்றும் மழையில் கால் கடுக்க நின்று பேருந்து ஏறி செல்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

    மேலும் பள்ளி மாணவ மாணவிகள் அனுமந்தன்பட்டி பகுதியிலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு ஏறி செல்வதாக கூறுகின்றனர்.

    இதனால், அனுமந்தன்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி