Home /local-news /

சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - முழு விவரம்..

சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - முழு விவரம்..

Police Training

Police Training

SI Exam Free Coaching | இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தேர்வு பெற்ற வல்லுனர்களைக் கொண்டு 01.04.2022 வெள்ளிக் கிழமை முதல் தினமும் நடைபெற இருக்கிறது.

    444 சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் இலவசமாக ஆன்லைன் முறையில் நடத்தப்பட உள்ளது.

    இலவச பயிற்சி வகுப்பு :-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட
    சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கான 444 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு 2022 ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.

    இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 07.04.2022 ஆகும். இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தேர்வு பெற்ற வல்லுனர்களைக் கொண்டு  01.04.2022 (வெள்ளிக் கிழமை) முதல் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை ஆன்லைன் வாயிலாக பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சியின் போது இலவசப் பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் நடத்தப்பட உள்ளது.

    மேலும் இவ்வலுவலக நுாலகத்தில் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வலுவலகத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2021 ம் வருடத்தில் தேர்ச்சி பெற்ற 6 நபர்கள் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக தற்போது பணியாற்றி வருகின்றனர்.

    பயிற்சி வகுப்புகளில் சேருவது மற்றும் இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிவது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 04546- 254510 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணைய சப்இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி