முகப்பு /Local News /

சோலைக்குள் கூடல்: கூடலூரை சோலையாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் தன்னார்வலர்கள்..

சோலைக்குள் கூடல்: கூடலூரை சோலையாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் தன்னார்வலர்கள்..

X
Solaikkul

Solaikkul kudal workers

Theni District | பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து தேனி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் இயற்கை சார்ந்த மரம் நடுதல், விதைப்பந்து விதைத்தல், நெகிழி அகற்றல் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் "சோலைக்குள் கூடல்" என்ற தன்னார்வ அமைப்பைப் பற்றிய செய்தி தொகுப்பு..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேனி மாவட்டம் கூடலூரில்  ‘சோலைக்குள் கூடல்' என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு சுமார் 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் கூடலூர் பகுதி முழுவதும் மரம் நடுவது, பனை விதை நடுவது, சீமை கருவேலமரங்களை ஒழிப்பது, இயற்கைசார் விழிப்புணர்வு, நெகிழி ஒழிப்பு போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 6  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அதனை பராமரித்து வருகின்றனர். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சீமைக்கருவேல மரங்களை வேரோடு ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். குறிப்பாக நீர்நிலைப் பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளையும் விதித்துள்ளனர்.

சோலைக்குள் கூடல் என்ற தன்னார்வ அமைப்பில் பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர்களே உறுப்பினராக உள்ளனர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூடலூர் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த பகுதியில் மரம் நடுவது நெகிழிப்பை அகற்றுவது, நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பது, சாய்ந்த செடிகளுக்கு பிடிமானம் ஏற்படுத்தி தருவது, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

தொடர்ந்து 243 ஆவது வாரமாக தன்னார்வ பணியை செய்து வரும் இந்த அமைப்பானது வாட்ஸ்அப் குழு மூலம் தன்னார்வ அமைப்பிலுள்ள பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த சமூகப் பணியை செய்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைப்பு:-

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் , கல்வியை முடித்து வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என பலரும் இந்த அமைப்புடன் இணைந்து சமூகப் பணிகளை செய்து வருவது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வேப்பமரம், புங்கை மரம், பூவரச மரம் போன்ற நாட்டு மரங்களை மட்டுமே இந்த அமைப்பானது நட்டு வருகிறது. கூடலூரானது விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் சிறிய மரக்கன்றுகளை நடாமல், சோலைக்குள் கூடல் அலுவலக இடத்திலேயே ஒரு குறிப்பிட்ட அளவு மரமாக வளர்த்த பின்னர் ஊர் பகுதிக்குள் மரங்களை நட்டு வருகின்றனர். மின்சார வயர் செல்லும் பகுதியில் பெரிய அளவிலான மரங்களை நடாமல் மூலிகை சார்ந்த செடிகளை நட்டும் அசத்தி வருகின்றனர்.

தன்னார்வ அமைப்பில் உள்ள மாணவர்களுக்கு ஓய்வு நேரத்தில் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு கதை, நடனம், பாடல், சமூகம் சார்ந்த பல கருத்துகள் போன்ற பல்வேறு செயல்கள் பகிரப்பட்டு இயற்கையோடு ஒன்றி உள்ளனர் இந்த தன்னார்வ அமைப்பினர்.

குறிப்பாக பள்ளி மாணவர்களை சிறுவயதிலேயே தன்னார்வலராக மாற்றும் இந்த அமைப்பானது, மாணவர்கள் வளர்ந்து இளைஞராகும் தருணத்திலும் அவர்களின் தன்னார்வ ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்துவதாக கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் .

இந்த அமைப்பில் இருந்த பள்ளி மாணவர்கள் கல்லூரிக்குச் சென்று அங்கும் அவர்களின் சக நண்பர்களோடு இணைந்து பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது பெருமையாக உள்ளது என்கின்றார் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் .

அதுமட்டுமல்லாமல் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இயற்கையை புரிந்து கொள்ளும் விதமாகவும் தண்ணீர் தினம் பூமி தினம் சிட்டுக்குருவி தினம் போன்ற இயற்கை சார் தினங்களை கொண்டாடி வருகின்றனர்.

இயற்கையே இன்பம் இயற்கையை நேசி என்னும் தாரக மந்திரத்துடன் சமூகப் பணியை செய்துவிடும் இந்த தன்னார்வ அமைப்பினரே கூடலூர் பகுதி மட்டுமல்லாமல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்: சுதர்ஸன்

First published:

Tags: Cumbum, Nature lover, Theni, Tree plantation