தேனியில் உதவித் தொகையுடன் தொழிற் பயிற்சி சேர்க்கை முகாம்
தேனியில் உதவித் தொகையுடன் தொழிற் பயிற்சி சேர்க்கை முகாம்
Camp
Theni| தேனி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடத்தப்பட உள்ளது.
பயிற்சி முகாம் :-
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்து 2017, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அகில இந்திய தொழிற் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர்களுக்கான சேர்க்கை முகாம் நடத்தப்படுகிறது.
தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி (21.04.2022) காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இம்முகாம் நடைபெற உள்ளது.
இதில் தேனி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னனி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இதில் பங்கேற்க உள்ள பயற்சியாளர்கள் அவர்களது ஐடிஐ தேர்ச்சி சான்றிதழ், 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 7,700 முதல் 8,050 வரை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் தரப்படும்.
மேலும் இதனைப் பற்றிய கூடுதல் விபரங்களை அறிய மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தேனி என்ற முகவரி அல்லது 94999 37453, 88702 82856, 88387 19738 என்ற எண்களில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.