Home /local-news /

“லாக்டவுன்ல 600 ரூவாய்க்கு வாங்கி குடிச்சோம், 10 ரூவாலாம் மேட்டர் இல்ல” - மது பிரியர்கள்

“லாக்டவுன்ல 600 ரூவாய்க்கு வாங்கி குடிச்சோம், 10 ரூவாலாம் மேட்டர் இல்ல” - மது பிரியர்கள்

“லாக்டவுன்ல

“லாக்டவுன்ல 600 ரூவாய்க்கு வாங்கி குடிச்சோம், 10 ரூவாலாம் மேட்டர் இல்ல”

Tasmac | இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபானங்களின் விலை உயர்வு பெரிதும் பாதிக்காது என மதுப் பிரியர்கள் தெரிவித்துள்ளனர் 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபானங்களின் விலை உயர்வு தங்களை பெரிதும் பாதிக்காது என மதுப் பிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இல்லத்தரசிகளே இதனால் அதிகம் பாதிப்படையக் கூடும் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

    டாஸ்மாக் - விலை ஏற்றம் :-

    தமிழகத்தில் கடந்த 5ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான விலை ஏற்றம் மது பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 90க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளது. இன்று முதல் அனைத்து மதுபான கடைகளிலும் இந்த விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.
    பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் தங்களது தினசரி வருமானத்தில் ஒரு பகுதியை மதுவிற்காக செலவழிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    தினசரி மது அருந்தும் கூலித் தொழிலாளர்களுக்கு இந்த விலை ஏற்றம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக தினசரி கூலியில் ஒரு பகுதியை மது அருந்துவதற்காக ஒதுக்கும் கூலித் தொழிலாளர்கள், இந்த மதுவின் விலை ஏற்றத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் உடனடியாக மது பழக்கத்திலிருந்து வெளியே வர முடியாது எனவும், கொரோனா காலத்தில் 600 ரூபாய்க்கு மது வாங்கி அருந்தினோம். இந்த 10 ரூபாய் விலை ஏற்றம் பெரிதும் பாதிக்காது எனவும் கூறுகின்றனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள நபர்களின் வீட்டைச் சேர்ந்த பெண்கள் கூறுகையில், மதுபானம் விலை எவ்வளவு இருந்தாலும் மது அருந்தும் பழக்கத்தை அவர்கள் நிறுத்தப் போவதில்லை. கூலி வேலைக்கு சென்று விட்டு அவ்வப்போது வீட்டிற்கு கொடுக்கும் சிறிய அளவு பணம் கூட இனி கிடைக்குமா என்பது சந்தேகம் தான், இந்த விலையேற்றத்தால் தாங்கள் தான் மறைமுகமாக பாதிக்கப்படுவதாகவும் தங்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Price hike, Tasmac, Theni

    அடுத்த செய்தி