Home /News /local-news /

தேனி மாவட்ட மக்களுக்கும் செங்கரும்புக்கும் இடையே உள்ள உறவு - வியக்க வைக்கும் தகவல்கள்

தேனி மாவட்ட மக்களுக்கும் செங்கரும்புக்கும் இடையே உள்ள உறவு - வியக்க வைக்கும் தகவல்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் விரும்பும் கரும்பானது நெல், திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் விரும்பும் கரும்பானது நெல், திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் விரும்பும் கரும்பானது நெல், திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

    தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை தேனி மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை என்பது விவசாயத்தையும், விவசாயிகளையும் விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளையும் கொண்டாடும் பண்டிகையாகவும், நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகவும் உள்ளது.

    பொதுவாக பொங்கல் பண்டிகை என்பது, மார்கழி மாதங்களில் அறுவடையாகும் நெல், கரும்பு போன்ற விவசாயப் பொருள்களை அறுவடை செய்து, மக்கள் தங்கள் வீடுகளில் எடுத்து வந்து அதனை வழிபட்டு தங்கள் உழைப்பின் பயனை கொண்டாடும் வகையில் இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொதுவாக தேனி மாவட்டம் விவசாய பூமியாக பார்க்கப்படுவதால், நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை தேனி மாவட்ட மக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவர். பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் கரும்பின் பயன் இன்றியமையாததாக உள்ளது. பொங்கல் பண்டிகையின் சிறப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிக்கும் செங்கரும்பினை கடித்து மகிழ்வதாகும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் விரும்பும் கரும்பானது தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. பத்து மாத பயிராக விளையும் செங்கரும்புக்கும் தேனி மாவட்ட மக்களுக்கும் ஒரு பெரிய உறவு உள்ளது என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

    விவசாயிகளின் நம்பிக்கை :-

    விவசாயிகள் அதிகம் வாழும் தேனி மாவட்டத்தில், விவசாயிகளின் கடின உழைப்பை போற்றும் வகையில், கடின உழைப்பினை கரும்பின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள்.

    மனிதர்களின் கடின உழைப்பு பற்றியும், வாழ்வில் சந்திக்க வேண்டிய சிக்கல்களை கடந்து செல்ல வேண்டும் என்பதை செங்கரும்பினை வைத்து விளக்குகின்றனர்.

    பொதுவாக கரும்பானது 5 அடி முதல் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. கரும்பின் அனைத்துப் பாகங்களும் இனிப்பு தரக்கூடிய பகுதிகளாக இருப்பதில்லை. கரும்பினும் நுணி (மேல்) பகுதியானது அதிகம் இனிப்பு இல்லாமல் சிறிது உப்பு கரிக்கும் தன்மையை கொண்டதாக உள்ளது. ஆனால் கரும்பில் அடிப்பகுதி மிகவும் இனிப்பு நிறைந்ததாக உள்ளது.

    தொடர்ந்து கடினமாக உழைக்கும் போது, ஆரம்பப் பகுதி இனிப்பு தராமல் இருந்தாலும், கடின உழைப்பானது நாள் போக்கில் கரும்பின் அடிப்பகுதியை போல அதிக சுவையுடையதாக மாறும் என்பதும்,

    கரும்பின் வெளிப்புறத் தோல் கடினமானதாகவும் கரடுமுரடான தோற்ற நிலை உடையதாக இருக்கும், கரும்பின் தோலை உரித்தால்தான் இனிப்பான கரும்பை அடைய முடியும் என்பதை போல, வாழ்க்கையில் வெற்றி பெற கடின முயற்சியும் கடின உழைப்பின் மூலமும், வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை கடந்து இனிமையான கரும்பை போல இனிய வாழ்வை வாழ முடியும் என்பது தேனி மாவட்ட விவசாயிகளின் ஐதீகமாக உள்ளது.

    10 மாத பயிராக உள்ள கரும்பானது, விவசாயிகள் கருவில் இருந்து குழந்தையை பெற்றெடுப்பது போல எனக் கூறுவது, பொங்கல் பண்டிகைக்கும் தேனி மாவட்ட மக்களுக்கும் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Pongal, Theni

    அடுத்த செய்தி