Home /local-news /

"அரசு உதவினால் வெளிநாட்டிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கோம் "- தேனி விவசாயிகள்!

"அரசு உதவினால் வெளிநாட்டிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கோம் "- தேனி விவசாயிகள்!

Mango 

Mango 

Theni District | தேனி மாவட்டத்தில் தற்போது மா விளைச்சல் மிகக் குறைந்த அளவில் உள்ள நிலையில், உள்நாட்டில் வியாபாரம் செய்வதை விட வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள். 

    தேனி மாவட்டத்தில் தற்போது மா விளைச்சல் மிகக் குறைந்த அளவில் உள்ள நிலையில், உள்நாட்டில் வியாபாரம் செய்வதை விட வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

    மா விவசாயம் :-

    தேனி மாவட்டத்தில் அதிகளவில் நெல், வாழை, திராட்சை போன்ற விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இவைகளுக்கு அடுத்தபடியாக  மாவட்டத்தில் பெருமளவு மா விவசாயம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.

    கோடை காலத்தில் பொது மக்களுக்கு பிடித்த உணவான மாம்பழத்தை விவசாயம் செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் பங்கு உண்டு.

    தேனி மாவட்டத்தில் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே செந்தூரம், கள்ளாமை, இமாமஸ், அல்போன்சா, காளபாடி, பங்காள வெள்ளி, இதற நாட்டு மா வகைகள் மற்றும் வெளிநாட்டு வகை மா - வும் பயிரிடப்படுகிறது. 5 முதல் 6 மாத கால பயிரான மாம்பழ சீசன் ஏப்ரல் மே மாதங்களில் தொடங்கும். ஏப்ரல் மே மாதங்களில் மா விற்பனை அமோகமாக நடைபெறும்.

    விளைச்சல் குறைவு :-

    தற்போது கம்பம் பகுதிகளில் மா விளைச்சல் நன்றாக இருந்தாலும், தற்போது விளைந்து இருக்கக்கூடிய அளவைக் காட்டிலும் அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

    டிசம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக மரத்தில் உள்ள பூக்கள் முழுவதும் உதிர்ந்து விட்டதால் போதிய விளைச்சளை விவசாயிகளால் இந்த ஆண்டு பெற முடியவில்லை.

    ஆட்கூலி உயர்வு, உர விலை உயர்வு, சீரற்ற மழை போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான விளைச்சலை மட்டுமே விவசாயிகளால் எடுக்க முடிந்தாகவும் கூறப்படுகிறது.

    தெனிஇமாமஸ், அல்போன்சா, போன்ற வகைகள் வெளிச் சந்தைகளில் நல்ல விலை போகக் கூடியது என்கின்றனர் விவசாயிகள். ஆனாலும் கிலோ 125 ரூபாய்க்கு விற்க கூடிய இமாமஸ் வகை மாம்பழம் 85 ரூபாய்க்கும், கிலோ 100 ரூபாய் விலை கொண்ட அல்போன்சா தற்போது 70 ரூபாய் மட்டுமே விற்பனை ஆகிறது.

    எதிர்பார்ப்பு :-

    தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர், ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் மா வரத்து பெரிய அளவில் இல்லாததாலும், சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் சித்திரைத் திருவிழாவவை முன்னிட்டும் இனி போகக் கூடிய நாட்களில் விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் உள்நாட்டில் ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்தால் கிடைக்கக்கூடிய லாபத்தை விட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள். வெளிநாட்டில் ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக மாம்பழத்தை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டால் விவசாயிகள் நாங்கள் தயாராக உள்ளோம் என்றனர்.

    உள்நாட்டில் ஏற்றுமதி செய்வதால் இடைத்தரகர்கள் அதிக லாபம் சம்பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மா, நுகர்வோரை சென்று அடையும் போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விலையிலிருந்து இருமடங்காக செல்கின்றது என்கின்றனர் விவசாயிகள்.

    வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் இவை குறையும். பெருமளவு இடைத்தரகர்கள் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர் விவசாயிகள்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Cumbum, Theni

    அடுத்த செய்தி