தேனி: நேற்று கோடை வெயில் அதிகமாக இருந்ததால் வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.
போடி நாயக்கனூர் பகுதியில் 3.4 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பகுதியில் 1.3 மில்லிமீட்டர் மழை அளவும், உத்தமபாளையம் பகுதியில் 3.6 மில்லிமீட்டர் மழை அளவும், தேக்கடி பகுதியில் 0.4, பெரியாறு அணைக்கட்டு பகுதியில் 0.2 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று லேசான மழை பொழிவு இருந்தாலும் மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்.
நீர்மட்டம் :-
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ..
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 68.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 34.00 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து ஏதுமில்லை. நீர் வெளியேற்றம் இல்லை.
126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 75.11 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 03 கன அடி . 03 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.00 அடியாக உள்ளது. நீர்வரத்து 100 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் பெரியார் அணைக்கட்டு பகுதிகளில் லேசான மழை பெய்தாலும், அணைகளுக்கு நீர்வரத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.