கம்பம் பகுதியில் மணலால் செய்யப்படும் பானை, சட்டி, அடுப்பு போன்ற வகைகளின் விற்பனை அமோகமாக உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
மண்பாண்டம் விற்பனை :-
தேனி மாவட்டத்தில் மண் பாண்டங்கள் விற்பனை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. திம்மநாயக்கன்பட்டி பகுதியில் அதிக அளவிலான மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பாண்டங்களை செய்து பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கம்பம் பகுதியில் உள்ள மண் பாண்ட வியாபாரிகள், திம்ம நாயக்கன் பட்டி, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளிலிருந்து மண்பாண்டங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
எப்போதும் மண்பாண்ட பொருள்களுக்கு கம்பம் பகுதியில் மவுசு உள்ளது என்கின்றனர் மண்பாண்ட வியாபாரிகள். தேனி மாவட்ட மக்கள் பெரும்பாலும் மணலால் செய்த பொருட்களை வாங்கி இப்போதும்
பயன்படுத்துகின்றனர். பொங்கல் காலத்தில் அதிக அளவிலான மண்பானைகள் விற்பனை ஆனாலும், வழக்கமாக தொடர்ந்து அடுப்புகள், கேத சட்டிகள், சமையல் பாண்டங்கள் போன்றவற்றின் விற்பனை எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்கின்றனர் மண்பாண்ட விற்பனையாளர்கள்.
இதுகுறித்து மண்பாண்ட விற்பனையாளரான சடையாண்டி கூறுகையில், \" கேத சட்டிகள், அடுப்புகள், பணியர சட்டிகள், உண்டியல் போன்ற மணலால் செய்த பொருட்களை இப்பகுதி மக்கள் தொடர்ந்து வாங்கிச் செல்கின்றனர்.
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை சட்டி விற்பனை அதிகமாக இருக்கும். சித்திரை மாதத்திலும் அதிக விற்பனை இருக்கும். தினசரி அதிகபட்சமாக ரூ.2,000 வரை மண்பாண்டம் விற்பனையாகிறது. கேரள மாநிலத்தவர்கள் வருகை அதிகரிக்கும் போது தினசரி வருமானம் 5 ஆயிரத்தை கடக்கும் என்றார்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.