Home /local-news /

பெரியகுளம் : மகாலட்சுமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை - தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்

பெரியகுளம் : மகாலட்சுமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை - தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்

Temple 

Temple 

மகாலட்சுமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரன் சிலை, நாகராஜர், சிவன் ஆகிய சிலைகளுக்கு 5 வகை சாதங்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் சோமவார பிரதோஷம் கும்ப கலசங்களுடன் அதிகார நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சிறப்பு பூஜை :-

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி திருக்கோவிலில் மாசி மாதம் விஷேச நாளை முன்னிட்டு சோமவாரம் பிரதோஷம் கும்ப கலசங்களுடன் வழிபாடு நடைபெற்றது.

    இதில் மகாலட்சுமி கோவிலில் உள்ள நந்தீஸ்வரன் சிலை, நாகராஜர், சிவன் ஆகிய சிலைகளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், குங்குமம், உள்ளிட்டவைகளும், தயிர் சாதம், லெமன் சாதம், புளிச்சாதம், சர்க்கரை பொங்கல், தக்காளி சாதம், வெண்பொங்கல், என 5 வகை சாதங்களை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த சோமவார பிரதோஷம் அதிகார நந்தீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்களை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    வழிபாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, கடவுளை வணங்கி பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி